இதுவும் கடந்து போகும்
கூடிய மேகங்கள் கலைந்து செல்லும்
வாடிய பூக்கள் மீண்டும் மலரும்.
சிவந்த வானம் வண்ணம் மாறும்,
மனமே! இதுவும் கடந்து போகும்!
பிறந்தவை அனைத்தும் ஒருநாள் இறக்கும்,
நாம் வாழ்ந்ததை இவ்வுலகம் மறக்கும்.
மாற்றம் மட்டுமே நிலைத்திருக்கும்,
மனமே! இதுவும் கடந்து போகும்!
காட்சிகள் மாறி புதியவை தோன்றும்,
பழையன போய் புதியன பிறக்கும்,
ஒவ்வொரு முடிவும் ஒரு புதிய தொடக்கமாகும்,
மனமே! இதுவும் கடந்து போகும்!
இரவு கடந்து புது விடியல் வரும்,
உடல், மன காயங்கள் காலத்தால் ஆறும்.
பிரிவின் வலியும் மறைந்து விடும்,
கவலை வேண்டாம்—இதுவும் கடந்து போகும்.
Summarised version of a poem I liked.
Comments
Post a Comment