தனிபிறவியோ?

சேயாய் இருந்த வண்ணம், 
தாயின் ஒரு பாகமாய் இருந்தேன்;
தனிபிறவியோ என்ற கேள்வி எழும்பி
"நான் எனது என்னுடையது" 
என்ற அகங்காரம் பிறந்தது;
தனித்துவம் எனும் மாயையில் 
திளைத்தேன்;
தன்மானம் தேடி அலைந்தேன்;
தனிமையில் விழுந்தேன்!

ஒரு நாள் தனிமரமானேன்!!
இறுதியில் "நான்" இறந்தது...
நிழலும் இல்லாமல் நான் மறைந்தேன்.

சாரதி கிருஷ்ணன் பங்களிப்பு:
நான்-ஐ நானே நாணக் செய்தால்,
நான் நாணி நிழலில்லாமல் மறைந்து போகும்?

நான் இறங்கும் முன்னே நான்-ஐ இழந்தால்,
தருமனின் நாணும் நாணும்.

Comments

Popular posts from this blog

I Will Get What I Got

🌾 Chase Not, Choose Stillness 🌿

Be with what you need