நீ உன் உயிர். மற்றவை உன் செயல்.
நீ சிந்தனை அல்ல, உணர்வு அல்ல,
நீ நினைவு அல்ல, கனவு அல்ல,
உன் நம்பிக்கைகளும் வெறும் நிழல்.
எது நிஜம் என தேடிக் காண்.
நீ இறப்பது பிரச்சனை அல்ல,
நீ உணராமல் வாழ்வதே பிரச்சனை.
கண்களை மூடி, கூர்ந்து நோக்கு,
மௌனத்தில் உன் உயிரை உணர்.
உயிர் மட்டுமே நீ,
மற்றவை அனைத்தும் உன் கருவி.
இக்கணமே உயிருடன்
இவ்வாழ்வை உணர்ந்து பார்!
Comments
Post a Comment