எதற்காக யாசிக்கிறேன் என்று யோசிக்கிறேன்


அறியாமல், புரியாமல் 
ஒரு பிச்சைக்காரன் போல
"வெளியே" 
யாசிக்கிறேன்.

எதற்காக யாசிக்கிறேன்?
- அன்பிற்காக...
- அரவணைபிற்காக...
- ஆசைகள் கைகூட...
- இன்பம் அடைய... 
- என்னை மதிக்க  
- மரியாதை பெற  
- மகிழ்ச்சி கிடைக்க
- பாதுகாப்பிற்காக 
 
அறிவேனா
என் உள்ளே
புதைந்து கிடக்கிறது  
ஓர் மிக பெரிய 
பொக்கிஷம்!

அந்த மெய்பொருளை
புரிவேனோ?
அறிந்து புரிந்தால்
இங்ஙனம்
யாசிப்பேனோ?

யோசிக்கிறேன்.

Comments

Popular posts from this blog

I Will Get What I Got

🌾 Chase Not, Choose Stillness 🌿

Be with what you need